நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு

Update: 2023-07-15 18:45 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.93-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.8 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.101 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.1 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக குறைந்து உள்ளது.

கடந்த 6 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்