மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு கல்வி சுற்றுலா
மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.;
புதுக்கோட்டையில் மனவளர்ச்சி குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களுடன், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான, தஞ்சை பெரியகோவில், அரண்மனை, சிவகங்கை பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஒருநாள் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பஸ்சில் சுற்றுலா சென்று சுற்றிப்பார்த்தனர். இந்த கல்வி சுற்றுலா பயணத்தில் 35 இளம் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 70 பேர் சென்றனர். முன்னதாக அவர்களது பயணத்தை புதுக்கோட்டை பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இளம் சிறார்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.