கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-05 19:30 GMT

கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் ஊதியம் வழங்கக்கோரி பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் கோபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ஹரிஹரன் உள்பட மாவட்ட கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரியும், பள்ளி கல்வித்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்