உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் - விஜயகாந்த்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2022-08-03 11:05 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையமும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் மாணவர்களால் எப்படி கல்வி கடன் செலுத்த முடியும்.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அந்த மாணவர்கள் படிப்பை இங்கேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்