தொழிலாளியின் 2 மகள்கள் கல்வி செலவை சபாநாயகர் அப்பாவு ஏற்றார்
வெள்ளத்தில் சிக்கி பலியான தொழிலாளியின் 2 மகள்கள் கல்வி செலவை சபாநாயகர் அப்பாவு ஏற்றார்
பணகுடி:
பணகுடி அனுமன் நதி ஆற்றில் கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பணகுடி கொமந்தன் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான இசக்கிமுத்து என்பவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த சபாநாயகர் அப்பாவு, இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் இசக்கிமுத்துவின் 2 பெண் குழந்தைகள் அவருடைய சகோதரர் மலையாண்டி பராமரிப்பில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு தனது சொந்த செலவில் நிதி உதவி வழங்கினார். முதல்-அமைச்சரிடம் பேசி நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். மேலும் 2 பெண் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார்.