எடப்பாடி பழனிசாமியின் நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு

முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2022-10-28 09:54 GMT

திருச்சி,

முசிறியில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்த கல்வி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தி, விசாரணைக்காக ஆவணங்களை எடுத்து சென்றனர். இந்த நிலையில், அந்த குழுமத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்தின் நிலப்பரப்பு, கட்டிடத்தின் மதிப்பு ஆகியவை குறித்து மதிப்பீடு செய்தனர். கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், கல்லூரி கட்டிடங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்