கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி...!

கவர்னர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.;

Update: 2022-11-23 03:56 GMT

சென்னை,

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று பகல் 12.45 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்