அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல்...!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை இன்று அறிவித்தது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பமுள்ளோர் நாளை மற்றும் நாளை மறுநாள் (17,18) வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 26-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.