தஞ்சைக்கு, 4-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மே மாதம் 4-ந் தேதி தஞ்சை வருகிறார். ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.;
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மே மாதம் 4-ந் தேதி தஞ்சை வருகிறார். ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
உறுப்பினர் சேர்க்கை படிவம்
தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் படிவங்கள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருஞானசம்பந்தம், சேகர், ரத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ராமச்சந்திரன், ராம ராமநாதன், கோவிந்தராசு, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமி வருகை
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக மே 4-ந் தேதி தஞ்சை வருகிறார். அவர் ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் எனது ஏற்பாட்டின் பேரில், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
தஞ்சைக்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் அனைவரும் பாரபட்சம் காட்டாமல் ஆர்வமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று அ.தி.மு.க.வில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் யாரும் சேர மாட்டேன் என்று கூற மாட்டார்கள். தி.மு.க. ஆட்சி எப்போது முடியும் என்று தான் மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உறுப்பினர்களை சேர்க்கும் போது அ.தி.மு.க. ஆட்சியில் நாம் செய்த சாதனைகளை கூறி சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
கூட்டத்தில் ஜெயலலிதாபேரவை மாநில இணை செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர, பகுதி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அறிமுகப்படுத்தி பேசினார்.
முடிவில் 51-வது வார்டு செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.