"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்

Update:2023-03-20 09:54 IST
Live Updates - Page 4
2023-03-20 06:05 GMT

கோவை மெட்ரோ ரெயில்

கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்

2023-03-20 06:03 GMT

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

2023-03-20 06:02 GMT

அண்ணா சாலையில் மேம்பாலம்

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும்

2023-03-20 05:59 GMT

மண்சாலைகள் மேம்படுத்தப்படும்

நகர்புற உள்ளாட்சிகளில் 1,424 கிலோ மீட்டர் மண்சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்

2023-03-20 05:58 GMT

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

2023-03-20 05:57 GMT

உயர்தர சிறுவர் பூங்கா

கோவையில் உயர்தர சிறுவர் பூங்கா அமைக்கப்படும்

2023-03-20 05:55 GMT

ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டம்

7 ஆயிரத்து 149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

2023-03-20 05:53 GMT

ஊரக சாலைகள் மேம்பாடு

10 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்

2023-03-20 05:50 GMT

நான் முதல்வன் திட்டம்

நான் முதல்வன் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2023-03-20 05:49 GMT

ஈரோட்டில் புதிய சரணாலயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்