"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்

Update:2023-03-20 09:54 IST
Live Updates - Page 3
2023-03-20 06:47 GMT

முக்கிய இடங்களில் இலவச ‘வை-பை’ இணையதள சேவை

சென்னை தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சியில் முக்கிய பொதுஇடங்களில் இலவச ‘வை-பை’ இணையதள சேவை வழங்கப்படும்

2023-03-20 06:44 GMT

தீவுத்திடல் வசதிகள் மேம்பாடு

தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2023-03-20 06:42 GMT

பொது விநியோகத்திட்டம்

பொது விநியோகத்திட்டத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2023-03-20 06:40 GMT

பழைய பஸ்கள் புதுப்பித்தல்

500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும்

2023-03-20 06:38 GMT

1000 புதிய பஸ்கள்

1000 புதிய பஸ்கள் வாங்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

2023-03-20 06:23 GMT

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 - பட்ஜெட்டில் அறிவிப்பு

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


2023-03-20 06:17 GMT

வடசென்னை வளர்ச்சி திட்டம்

1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்

2023-03-20 06:12 GMT

நேரு விளையாட்டு அரங்கம்

சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கு 25 கோடி ரூபாய் செலவில் சீரமடைக்கப்படும்

2023-03-20 06:10 GMT

வெள்ள பாதிப்பு குறைப்பு

சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

2023-03-20 06:06 GMT

மதுரை மெட்ரோ ரெயில்

மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் மெட்ரோ ரெயில் திட்டம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

Tags:    

மேலும் செய்திகள்