விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-09-16 17:16 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள்

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தப்படும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். சிலைகள், பந்தல்களை அலங்கரிப்பதற்கும், சிலைகளின் மேல்பூச்சுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயன பொருட்கள், நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

பூஜைகள் செய்யும்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள், துணிகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக், தெர்மாகோலால் ஆன பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

அரசால் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்கார துணிகளை கொண்டு சிலைகளை அலங்கரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்ய மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகளை பயன்படுத்தக்கூடாது. நிகழ்ச்சியின்போது உருவாகும் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். குப்பை, கழிவுகளை பொறுப்பற்ற முறையில் கொட்ட வேண்டாம்.

அரசால் அறிவிக்கப்பட்ட நீர்நிைல இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்