கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

மதுரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-09 20:02 GMT

மதுரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தவக்காலம்

கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சாம்பல் புதன் அன்று முதல் தவக்காலத்தை தொடங்கினர். ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நேற்றுடன் அந்த தவக்காலத்தை நிறைவு செய்தனர். இதை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று காலை, மாலையிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஆலயங்கள்

மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை லூர்து, உதவிபங்குத்தந்தை ஜான்சன். மற்றும் செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம், எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலியும், சி.எஸ்.ஐ.மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்