திருவாரூர் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி

திருவாரூர் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Update: 2023-04-08 19:30 GMT

ஈஸ்டர் பண்டிகையையொட்டி திருவாரூரில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஈஸ்டர் பண்டிகை

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.

இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஏசு உயிர்பிப்பு திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை-திருப்பலி

திருவாரூர் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை பவனி நடந்தது. கிறிஸ்தவர்கள் இந்த பவனியில் கலந்து கொண்டனர். மேலும் ஏசுவின் சிலுவைப்பாடுகள் குறித்து தியானம் செய்யப்பட்டது. அப்போது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பின்னர் அவர் பேசியதாக பைபிளில் இடம் பெற்றுள்ள ஏழுவாசகங்களை கூறினர்

திருவாரூர் பாத்திமா அன்னை ஆலயத்தில் சிலுவையில் இறந்த ஏசு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் ஈஸ்டர் பெருநாளை கொண்டாடும் வகையில் நேற்று இரவு 11.30 மணியளவில் அருட் தந்தை ஜெரால்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 12 மணிக்கு ஏசு உயிர்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு திருப்பலி நடக்கிறது. நேற்று நள்ளிரவு நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை பறிமாறி கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்