ஈஸ்டர் பண்டிகை; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-31 07:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பகைவரிடத்திலும் அன்பு காட்டும் இரட்சகரான இயேசுபிரான் கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசுபிரான் போதித்த தியாகம், பாவ மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்