நாகை பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டம்
நாகை பகுதியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.;
நாகை லூர்துமாதா ஆலயம், மாதரசி மாதா ஆலயம், சவேரியார் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.