100 நாள் வேலையின்போது 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே 100 நாள் வேலையின்போது 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2023-10-05 19:14 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வழக்கம் போல் வேலை செய்துகொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.

இதனை பார்த்த 100 தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்