திண்டுக்கல் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-21 19:00 GMT

ம.தி.மு.க.வின் 5-வது உள்கட்சி அமைப்பு தேர்தல், திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மகபூப் ஜான் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வேட்பாளர்களிடம் இருந்து மனுக்களை பெற்று தேர்தலை நடத்தினார்.

இதில், மாவட்ட செயலாளராக செல்வராகவன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவராக சுதர்சன், மாவட்ட பொருளாளராக பழனிசாமி, துணை செயலாளர்களாக நளதமயந்தி, முனியாண்டி, செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சேகர், பாபு, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்களாக கருப்பையா, திரவியம், அய்யாத்துரை, ஆறுமுகம், மணிவண்ணன், முருகராஜ், ஜி.குணசேகரன், தினகரன், மு.குணசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதையடுத்து நடந்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் தொகுதியில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்