ஆக்கிரமிப்பால் சாலை போடும் பணி முடக்கம்
ஆக்கிரமிப்பால் சாலை போடும் பணி முடக்கம்;
தேவகோட்டை
திருச்சி-ராமேசுவரம் தொண்டி-மதுரை இணைப்பு சாலையாக கிளியூர் வழியாக 6½ கிலோ மீட்டர் தூரம் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினர். இதையடுத்து வட்டாட்சியர் செல்வராணி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு இருக்கிறதா? என நில அளவை துறை மூலம் அளக்க உத்தரவிட்டார். நில அளவைத் துறையினர் ஆக்கிரமிப்பு இருப்பதாக ஆய்வு அறிக்கையை அளித்த பின்பும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால் சாலை போடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை போடும் பணி தங்கு தடை இன்றி நடைபெற உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.