இதமான காலநிலை நிலவுவதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்

இதமான காலநிலை நிலவுவதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் அவர்கள் குடும்பத்துடன் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-09-18 20:45 GMT

வால்பாறை

இதமான காலநிலை நிலவுவதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் அவர்கள் குடும்பத்துடன் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள்

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பெய்தது. இதனால் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீர் வீழ்ச்சிகளிலும் வனப் பகுதியில் உள்ள நீரோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வால்பாறை பகுதியில் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியிலும் மலைகளுக்கு மத்தியிலும் தண்ணீர் அருவிகளாய் கொட்டி வந்தது.கடுமையான குளிர் பனிமூட்டம் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

குளித்து மகிழ்ந்தனர்

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை முற்றிலும் நின்று கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதனால் வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்த காலசூழ்நிலை தொடரும் பட்சத்தில் வருகின்ற நாட்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்