பயணிகள் வருகை அதிகரித்ததால் தர்மபுரி ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு

பயணிகள் வருகை அதிகரித்ததால் தர்மபுரி ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update:2023-01-15 00:15 IST

தர்மபுரி வழியாக பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள், மாநிலங்களுக்கு தினமும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதேபோல் சேலம், கோவை, நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் கேரளா மாநிலம் கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தர்மபுரி வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ரெயில்கள் மூலம் வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. இதனால் தர்மபுரி ரெயில் நிலைய நுழைவுவாயில் மற்றும் பிளாட்பாரம் பகுதிகளில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையில் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்து செல்வோரிடம் யாரேனும் திருட்டில் ஈடுபடுகிறார்களா என்பதையும் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்