பராமரிப்பு பணி காரணமாக 16 ரெயில்கள் ரத்து

ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி ரெயில் நிலையத்திற்கு வரும் 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.;

Update: 2023-07-25 19:54 GMT

ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி ரெயில் நிலையத்திற்கு வரும் 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

தெற்கு ரெயில்வே மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் மின்னணு இண்டர்லாக்கிங் வசதி கொண்ட முக்கிய ரெயில் நிலையமாக திருச்சி ஜங்ஷன் உள்ளது. தொலை தூர ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும், சுற்று வட்டாரப் பகுதியிலும் முக்கியமான ரெயில்கள் வந்து செல்லும் போது ரெயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, ரெயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக, திருச்சி சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20-ந்தேதி முதல் இண்டர்லாக்கிங் (பராமரிப்பு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் தற்போது பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து திண்டுக்கல் வழிதடங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி கோட்டத்தில் வருகிற 1-ந்தேதி வரை ரெயில்களை ரத்து செய்தல், பகுதியாக ரத்து செய்தல், மற்றும் ெரயில் வழித்தடங்களை மாற்றியமைத்தல் போன்ற ரெயில் சேவைகளின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

ரெயில்கள் ரத்து

அதன்படி வண்டி எண் 16233-16234 மயிலாடுதுறை - திருச்சி ரெயில் இன்று (புதன்கிழமை), மற்றும் 31-ந்தேதி, ஆகஸ்டு 1-ந்தேதி. வண்டி எண் 06498-06499 திண்டுக்கல்- திருச்சி ரெயில் 27, 30, 31-ந்தேதி மற்றும் 1-ந்தேதி, வண்டி எண் 06729- தஞ்சை - திருச்சி ரெயில் 29,30, 31-ந்தேதி மற்றும் 1-ந்தேதி. வண்டி எண் 06683 தஞ்சை - திருச்சி ரெயில் 30, 31, மற்றும் 1-ந்தேதி, வண்டி எண் 06871 தஞ்சை - திருச்சி ரெயில் 30, 31, 1-ந்தேதி. வண்டி எண் 06876 திருச்சி- தஞ்சை ரெயில் 30, 31, 1-ந்தேதி. வண்டி எண் 06829-06830 திருச்சி- மானாமதுரை 30, 31, 1-ந்தேதி. வண்டி எண் 12084-12083 கோவை - மயிலாடுதுறை 30, 31-ந்தேதி. வண்டி எண் 06869 தஞ்சை - திருச்சி ரெயில் 1-ந்தேதி. வண்டி எண் 12636 மதுரை - சென்னை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 1-ந்தேதி. வண்டி எண் 12605 சென்னை - காரைக்குடி அதிவிரைவு ரெயில் உள்பட 16 ரெயில்கள் 1-ந்தேதி உள்ளிட்ட தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுதவிர திருச்சி கல்லுக்குழி காலனி பகுதியில் ரூ.4 கோடி செலவில் ரெயில்வே ஜங்ஷனுக்கு 2-வது நுழைவுவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றி வந்து ரெயில் நிலையத்தை அடைவதற்கு பதிலாக இந்த 2-வது நுழைவு வாயிலை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் இருந்து விடுபடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்