வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.

Update: 2023-07-12 19:05 GMT

பூக்கள்

கரூர் மாவட்டம், நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர்.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிக்கு வரும் விவசாயிகளுக்கும், அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று ஏலம் விடுகின்றனர். இதனை வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.250-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.60-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160-க்கும், கனகாம்பரம் ரூ.280-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.130-க்கும், ரோஜா ரூ.220- முல்லைப் பூ ரூ.420-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.430-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்