தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதில் இருந்து-எடப்பாடி பழனிசாமியை பயம் தொற்றி கொண்டுள்ளது-மானாமதுரையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதில் இருந்து எடப்பாடி பழனிசாமியை பயம் தொற்றி கொண்டுள்ளது என மானாமதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2023-04-16 18:45 GMT

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.ம.மு.க மாவட்ட துணை செயலாளர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்ெ்சயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- அண்ணாமலை தி.மு.க.வினரின் ஊழல் சொத்து பட்டியலை வெளியிட்டதிலிருந்து எடப்பாடி பழனிசாமி மடியில் கனம் இருக்கின்ற மாதிரி பயத்தில், பதற்றத்தில் ஏதேதோ உளறுகிறார். லண்டனில் எனக்கு ஓட்டல் இருப்பதாக கூறுகிறார். அப்படி எனக்கு ஓட்டல் எதுவும் இருந்தால் அதனை அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன்.

அ.ம.மு.க. தொடங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காக இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எனவே இனிவரும் காலங்களிலும் அ.ம.மு.க. சுதந்திரமாக செயல்படும். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பிறகு பார்க்கலாம். அவர் நடத்தும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்வது குறித்தும் பின்னர் பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமி அரசு செய்த ஊழலால்தான் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு இருக்கின்றனர். அவர் பயத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களை என் பக்கம் திசை திருப்புவது ஏன் என்று தெரியவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்