மதுபோதையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சாத்தூர் அருகே மதுபோதையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-10-29 18:45 GMT

சாத்தூர்

சாத்தூர் தாலுகா சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 34). டிரைவர். இவருடைய மனைவி அழகுமீனா(24). சிவபெருமாளுக்கு அதிக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு, இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அழகுமீனா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சிவபெருமாள் மதுபோதையில் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத குறித்து அழகுமீனா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்