போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-08-08 22:09 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). கூலி தொழிலாளி. இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாண்டித்துைர கிணற்றுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து ராஜபாளையம் தீயணைப்பு அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடினர். பின்னர் அவரது உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்