வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,
நேற்று 40 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.35 முதல் 40 வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.45முதல் 50வரைக்கும் கொள்முதல் செய்தனர்,
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது குறைந்துள்ளதாகவும். இரண்டு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும் என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.