சென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2023-12-22 18:58 IST

சென்னை,

சென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த 10-ந்தேதி இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை போதை தடுப்புப்பிரிவு போலீசார் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் மேற்கொண்டு விசாரணையில், பெரம்பூரில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றதாக கூறினார். இதன் அடிப்படையில் அங்கு சென்ற போதை தடுப்புப்பிரிவு போலீசார் அக்பர் அலி என்பவரை கைது செய்தனர். அவர்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 54 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு 280 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்