போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-06-24 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலகம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலால் உதவி ஆணையாளர் செல்வநாயகம் தொடங்கி வைத்தார். பேரணியில் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலர் செல்லபாண்டியன், வருவாய் ஆய்வாளர் முத்துகண்ணன் மற்றும் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர். பயணியர் விடுதி முன்பு இருந்து புறப்பட்ட பேரணி, மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்