போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பொது சுகாதாரத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-08-20 13:41 GMT

பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கடலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா தலைமை தாங்கினார். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் அபிநயா வரவேற்றார். மருத்துவ அலுவலர் (பயிற்சி) பாக்கியலட்சுமி, மாநகராட்சி நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி ஆகியோர் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினர். அதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பஸ் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் நேர்முக உதவியாளர் ஹரிகிருஷ்ணன், சாத்தி என்.ஜி.ஓ. நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் சதீஷ்குமார் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்