மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகா மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், செயற்குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். கூட்டத்தில், கள்ளக்குறிச்சி சரக மருந்து ஆய்வாளர் கதிரவன் கலந்து கொண்டு கூறுகையில் மருந்து வணிகர்கள் பதிவுபெற்ற மருத்துவர்களின் சீட்டுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கவேண்டும், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக்கூடாது. மருந்து கொள்முதல் விற்பனை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றார். இதில் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த மருந்து வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.