போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நாடகம்

திருப்பத்தூரில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.;

Update: 2023-06-27 17:43 GMT

திருப்பத்தூர் பஸ் நிலைம், தூயநெஞ்ச கல்லூரி, வெங்களாபுரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சப்-கலெக்டர் பானு தலைமை தாங்கினார். தனி தாசில்தார் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சிவப்பிரகாசம் வரவேற்றார்.

பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளுக்கு ்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் நாடக கலைஞர்கள் மூலமாக மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடகம் மூலம் விளக்கப்பட்டது. சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் குறித்து புகார் அளிக்க 24 மணி நேர கட்டணமில்லா எண் 10581 குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்