சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காருக்குள் டிரைவர்கள் சூதாட்டம்;போலீசை கண்டதும் தப்பிஓட்டம்

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காருக்குள் சூதாடிய டிரைவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2022-12-26 22:27 GMT

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை அலுவலகத்தின் பின்புறம் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு அங்கு டிரைவர்கள் ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அதிகாரிகளின் வாகனங்களை 6 டிரைவர்கள் நிறுத்திவிட்டு அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட அரசு வாகனங்களின் டிரைவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சூதாட்டம் நடந்த வாகனத்தில் இருந்து சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்