டிரைவருக்கு கத்திக்குத்துதந்தை-மகன் கைது

தந்தை-மகன் கைது;

Update:2023-03-25 01:31 IST

ஈரோடு பெரியவலசு பிரசாத் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை பெரியவலசு கொத்துக்கார வீதி ஆட்டோ நிறுத்தத்தில், தனது ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (49) என்பவர், தனது 15 வயது மகன் ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி அடித்ததாக தெரிகிறது. இதை கிருஷ்ணமூர்த்தி தட்டிகேட்டபோது, வெங்கடாசலமும், அவரது மற்றொரு மகனான தட்சணாமூர்த்தி (22) என்பவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலம் மற்றும் அவருடைய மகன் தட்சணாமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்