சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சாவு

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-06-11 16:47 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் பண்ணையத்துபிள்ளை சந்து தெருவில் வசித்து வந்தவர் ஆறுமுகம் மகன் இளங்கோவன் (வயது 48). நெல் அறுவடை எந்திர டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். நைனார்பாளையம்-சின்னசேலம் சாலையில் தனியார் மகளிர் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இளங்கோவன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்