குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-04 18:45 GMT

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 30). டிரைவரான இவருக்கு சுடலைஈஸ்வரி (26) என்ற மனைவியும், பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சுடலைமணி மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் வைத்து கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 26-ந் தேதி சுடலைஈஸ்வரி வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் விரைந்து சென்று, சுடலைஈஸ்வரியை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசுக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுடலைமணி வீட்டில் வெளியே மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுடலைமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்