டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 32). லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சத்யா கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அருண் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.