வைரவன்குப்பம் கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள்

வைரவன்குப்பம் கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2022-06-10 10:05 GMT

பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் ஊராட்சியில் அடங்கியது வைரவன்குப்பம் கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் அவசியம் கருதி குடிநீர் ஆழ்துளை கிணறு, குடிநீர் குழாய் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் படி ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பூமி பூஜையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பங்கேற்று நமக்கு நாமே குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் சோழவரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசேகரன், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்திஹரிபாபு, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்