குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

குடி தண்ணீருக்காக அலைந்து கஷ்டப்படும் பொதுமக்கள் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுதான் எப்போது? என எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-06-15 16:54 GMT

முதுகுளத்தூர், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே குடி தண்ணீருக்காக அலைந்து கஷ்டப்படும் பொதுமக்கள் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுதான் எப்போது? என எதிர்பார்க்கின்றனர்.

குடிநீர் பிரச்சினை

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது குடிதண்ணீர் தான். முதுகுளத்தூர் மற்றும் முதுகுளத்தூரை சுற்றிய தேரிருவேலி, இதம்பாடல், கண்ணங்குடி, கருமல், மல்லல், மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், செங்கப்படை, ஏனாதி, காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் குடிதண்ணீர் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாகவே முக்கிய பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக குடிதண்ணீருக்காக ஆண்களும், பெண்களும் தள்ளுவண்டியில் குடங்களுடனும், இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் குடங்களை வைத்தும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைந்து கஷ்டப்பட்டு தண்ணீர் எடுத்து வரும் நிலை தான் தற்போதும் இருந்து வருகின்றது.

எதிர்பார்ப்பு

மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை இன்றும் சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் பொதுமக்கள் குடி தண்ணீருக்காக அலைந்து கஷ்டப்படும் நிலை தான் உள்ளது. மக்களும் எப்போது தான் இந்த தண்ணீர் பிரச்சினை தீருமோ என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனவே, வீடுகள் தோறும் குடிதண்ணீர் இணைப்பு கொடுத்து, தண்ணீர் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கும்பட்சத்தில்தான் இந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்