குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தஞ்சை அருகே வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.;

Update: 2023-01-31 21:18 GMT

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் வல்லம் பேரூராட்சி பகுதியில் நிலுவையாக உள்ள குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு கடந்த இரு தினங்களாக துண்டிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி கூறுகையில், பொதுமக்கள் விரைவில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என கூறினாா்.

Tags:    

மேலும் செய்திகள்