நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் வெற்றிவேந்தன், சிவதாணு, நல்லபெருமாள் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் கோகுல் வரவேற்று பேசினார். தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், காங்கிரஸ் வாக்குச்சாவடி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினா். கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.