தமிழகத்தில் திராவிட கட்சிகளால் பயன் இல்லை- அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் பயன் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.;
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ம.க. 2.0. அனைவருக்கும் உரிமை, அனைவருக்கும் வளர்ச்சி என்ற திட்டத்தின் கீழ் 2 நாட்களாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த சுற்றுபயணத்தின் நிறைவு நாளான நேற்று திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட மேதினபுரம், விநாயகபுரம், பட்டாபிராமபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, சிவாடா உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 55 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி நடத்தி வருகிறது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் போதை பொருள் விற்பனை அதிகரித்தது தான் மிச்சம். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியால் பயன் இல்லை.
திருத்தணி தொகுதியில் நெசவு தொழில் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில், ஆட்சியில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் தான் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். 2026-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.