திராவிட மாடல் பயிற்சி பட்டறை கூட்டம்
திராவிட மாடல் பயிற்சி பட்டறை கூட்டம்;
திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை கூட்டம் திருவாரூர் விளமலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ரஜனிசின்னா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட அமைப்பாளர் இளையராஜா வரவேற்றார். இதில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், செய்தி தொடர்பாளர் தமிழ் அமுதரசன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சி குறித்து இளைஞரணிக்கு பயிற்சி அளித்தனர். மேலும் இந்த பயிற்சி மூலம் திராவிட மாடல் ஆட்சி குறித்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, பாலச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எழிலரசன் நன்றி கூறினார்.