திராவிட மாடல் பயிற்சி பாசறை

திருச்செந்தூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.;

Update: 2022-11-19 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.

பயிற்சி பாசறை

தி.மு.க. இளைஞரணி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுயில் உள்ள இளைஞர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிவா எம்.பி.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

பின்னர் பயிற்சி ஆசிரியர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு, திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார். முன்னதாக மாநில சுயாட்சி குறித்து எழுத்தாளர் மதிமாறன் விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், யூனியன் தலைவர்கள் ஜனகர் (ஆழ்வார்திருநகரி), பாலசிங் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமாலுதீன், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், கானம் நகர செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமார் ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்