பெரிய முக்குளம் திரவுபதி அம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நாடகம்

பெரிய முக்குளத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது.

Update: 2022-06-19 16:52 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள பெரிய முக்குளம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மகாபாரத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சொற்பொழிவு, கவி வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் கல்யாணம், பாண்டவர் பிறப்பு, குறவஞ்சி, அபிமன்யு சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாபாரத விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்