அதிரடியாக குறைந்த தக்காளி விலை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சற்று குறைந்து கிலோவுக்கு ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
சென்னை,
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. தங்கம் விலை போல தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த சில தினங்களாக, தக்காளி விலை ரூ.200-க்கும் மேல் விற்கப்பட்டது.
இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 500 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிரித்துள்ள நிலையில், தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், 2-ஆம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.