டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

Update: 2023-10-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் ஷேர் அமைப்பு மற்றும் தர உறுதி மையம் சார்பில், 'ஆங்கில வாசகங்களை ஆராய்தல்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மாணவர் ஹரிஷ் அபூர்வன் வரவேற்று பேசினார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரஞ்சனி சங்கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ஆங்கில மொழியின் முக்கியத்துவம் மற்றும் ஆங்கில வார்த்தைகளை முறையாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு நேர்காணலை தைரியமாக எதிர்கொள்வது பற்றி விளக்கி கூறினார்.

இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி வர்ஷினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி வழிகாட்டுதலின்பேரில், ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சித்ரா செல்வி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்