விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.;
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விருது சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 396 பேருக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் ஜெயராணி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜசேகரன், சித்தலிங்கமடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜனசக்தி, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆரோக்கியராஜ், தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா, பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தமிழழகன், ராஜம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கரநாராயணன், திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமல்ராஜ், விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பெருமாள் ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.