அறந்தாங்கியில் இரட்டை குவளை முறை: டீக்கடைக்காரர்கள் 2 பேர் மீது வழக்கு

அறந்தாங்கியில் இரட்டை குவளை முறையை பின்பற்றிய 2 டீக்கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-01-06 18:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்தில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றுவதாக மங்களநாடு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் நாகுடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாகுடி போலீசார் மங்களநாடு கிராமத்தில் டீக்கடை நடத்தி வரும் வெங்கடாசலம், அருள்ராஜ் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்