இரட்டை கண்மாயில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-06-25 18:46 GMT

பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி இரட்டை கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையின் மடையில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றிய பின்பு கரைமேல் நின்று வெள்ளை துண்டு வீசினர். இதையடுத்து, அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ஜிலேபி, கெண்டை, கட்லா, விரால் உள்ளிட்ட மீன்களை போட்டிபோட்டு பிடித்து சென்றனர். பின்னர் அந்த மீன்களை வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் மைலாப்பூர் ஊராட்சி பகுதியில் நேற்று மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

Tags:    

மேலும் செய்திகள்